search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர் மாளிகை"

    குடியரசு தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை அளித்த தேநீர் விருந்தில் சபாநாயகர், முதல்வர் உள்பட பலர் பங்கேற்றனர். #rajbavan #teaparty #banwarilalprohit #EdappadiPalanisamy
    சென்னை:

    குடியரசு தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்தில் சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம், தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு செயலாளர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #rajbavan #teaparty #banwarilalprohit #EdappadiPalanisamy
    கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அவர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் இன்று ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #KodanadVideo #DMKProtest
    சென்னை:

    கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் பதவி விலக வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். இந்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.



    முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகிட வேண்டுமென்றும், தமிழக ஆளுநர் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 24-ம் தேதி அன்று காலை 10 மணியளவில், சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி, ஆளுநர் மாளிகை நோக்கி இன்று காலை திமுக நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றனர். ஆளுநர் மாளிகையை நெருங்கியபோது, போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து, திமுகவினரை தடுத்து நிறுத்தினர். ஆனால் திமுகவினர் தொடர்ந்து முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் செல்ல விடவில்லை. இதையடுத்து திமுகவினர் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். #KodanadVideo #DMKProtest
    நக்கீரன் கோபால் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. #NakkeeranGopal #NirmalaDevi #BanwarilalPurohit
    சென்னை:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியுடன் தொடர்புபடுத்தி கட்டுரை வெளியிட்டதால் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது கவர்னர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து நக்கீரன் கோபால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு பிறகு கோர்ட்டு உத்தரவால் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து இணை இயக்குனர் மூலம் ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கவர்னர் மாளிகை தொடர்பாக நல்லெண்ணம் கொண்டவர்கள் தெரிவித்த பரபரப்பூட்டும் தகவல் மற்றும் கவலையின் அடிப்படையில் இந்த விளக்க அறிக்கையை வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் சிறப்பான கலாச்சாரமும் திருவள்ளூவர் முதல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வரை தத்துவ ஞானிகள் மிகுந்த மாநிலம் ஆகும்.

    எனவே தமிழக மக்கள் உண்மையின் பக்கம் எப்போதும் நிற்பார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியானது.

    சமூக விரோத சக்திகள் சமுதாயத்தை கையில் எடுத்துக்கொள்ளும் அச்சுறுத்தல் ஏற்படும்போது உண்மையை தெரிவிக்க வேண்டிய அவசியம் கவர்னர் மாளிகைக்கு ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரி துணை பேராசிரியை நிர்மலாதேவியை கவர்னர் மற்றும் கவர்னர் மாளிகை அதிகாரிகளுடன் தொடர்புபடுத்தி கூறப்படுவது முழுக்க முழுக்க பொய்யானது.

    போலீசில் அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் உண்மையை வெளியில் கொண்டு வரும். இந்த நிலையில் மாநிலத்தின் முதல் குடிமகனான கவர்னர் மீது தொடர்ந்து கோழைத்தனமான, அருவெறுக்கத்தக்க, பொறுத்துக் கொள்ள முடியாத அவதூறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்தே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்பதை கண்டு பொதுமக்கள் சிரிக்கிறார்கள்.

    எந்த ஒரு வி‌ஷயத்திற்கும் ஒரு எல்லை உண்டு. இந்த விவகாரத்தை பொறுத்தவரை போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    சட்டம் தன் கடமையை செய்து கொண்டு இருக்கும் நிலையில் கடந்த 6 மாதமாக கவர்னரை பற்றி அவதூறு வெளியிடப்பட்டது. என்றாலும் கண்ணியம் கருதி கடந்த 6 மாதமாக கவர்னர் அமைதியாக இருந்தார்.

    இந்த நிலையில் நக்கீரன் பத்திரிகையில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளிவந்த இதழில் விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக இடம் பெற்ற தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை தந்தன. இந்த விவகாரத்தில் போலீசில் நிர்மலாதேவி என்ன வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார் என்ற உண்மையான தகவலை கட்டுரை எழுதியவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.

    அந்த கட்டுரையில் பத்திரிகை விதிமுறைகள் அனைத்தும் உச்ச அளவில் மீறப்பட்டுள்ளன. உண் க்கு புறம்பாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.



    உண்மையில் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஓராண்டாக கவர்னர் மாளிகைக்கு வந்ததே இல்லை. அவர் கவர்னரையோ அல்லது கவர்னரின் செயலாளரையோ அல்லது கவர்னர் மாளிகை அதிகாரிகளையோ சந்தித்ததே கிடையாது.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்தது. அந்த விழாவுக்கு கவர்னர் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது கூட கவர்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் தங்கவில்லை.

    கவர்னருடன் சென்றிருந்த அவரது செயலாளரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு செல்லவில்லை. ஆனால் இந்த உண்மையை எல்லாம் மறைத்து மிகுந்த வெறுப்பு உணர்வுடன் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

    வடிகட்டிய பொய்யான தகவல்களை கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை கண்டு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. இத்தகைய பத்திரிகைக்கு உண்மையை அறியாத சில மதிப்புமிக்கவர்கள் ஆதரவு கொடுத்தது வேதனையானது.

    சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய பாரதி, வ.உ.சிதம்பரனார், தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், பாரத ரத்னா விருது பெற்ற எம்.ஜி.ஆர், அப்துல்கலாம் போன்ற தலைவர்கள் தங்களது சிந்தனையால், செயலால், பேச்சால், எழுத்தால் நிறைய சேவை செய்து இம்மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    கவர்னர் மாளிகைக்கு அபரிமிதமான அதிகாரங்கள் இருந்தாலும் கூட இதுவரை எந்த நடவடிக்கையையும் யார் மீதும் எடுத்தது இல்லை. தொடர்ச்சியான அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எழுதி காயப்படுத்தியதால் தற்போது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஜனநாயக நாட்டில் கருத்துக்கள் ஆரோக்கியமான முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் அந்த கருத்துக்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ கவர்னரை அச்சுறுத்தும் வகையில் அமைந்தால் அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள இயலாது.

    கவர்னர் மாளிகையின் மாண்பை சீர்குலைப்பவர்கள் முன்பு ஒருபோதும் கவர்னர் மாளிகை அடிபணியாது.

    இவ்வாறு கவர்னர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #NakkeeranGopal #NirmalaDevi #BanwarilalPurohit
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் இன்று ஆளுநர் மாளிகைக்கு சரமாரி கேள்விகளை கேட்டுள்ளது. #Jayalalithadeath #Apollohospita #Rajbhavan
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய விசாரணை கமி‌ஷனின் காலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

    நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்சுகள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    விசாரணை கமி‌ஷனில் சசிகலா சார்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சாட்சியம் அளித்தும் குறுக்கு விசாரணை நடத்தியும் வருகிறார்.



    இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் இன்று ஆளுநர் மாளிகைக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக விசாரணை ஆணையம் கூறுகையில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எத்தனை மருத்துவ குறிப்புகள் ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டது? அங்கிருந்து மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டு இருப்பின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டதா?

    ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதாவை பார்த்துவிட்டு சென்ற பிறகு ராஜ்பவனில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதா?

    மேலும், ஜெயலலிதா உடல்நிலை, அவருக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ, எய்ம்ஸ், ராஜ்பவன் இடையே கடிதத் தொடர்பு ஏதேனும் இருந்ததா? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

    ஏற்கனவே, அப்பல்லோ மருத்துவமனை சார்பில் விசாரணை ஆணையத்துக்கு கடந்த 11-ம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Jayalalithadeath #Apollohospita #Rajbhawan
    தமிழக ஆளுநரின் ஆய்வுக்கு மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பரமத்தி சாலை வழியாக அண்ணாநகருக்கு காரில் சென்றார். 

    அப்போது கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தின்போது ஆளுநர் சென்ற கார் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசப்பட்டதாக புகார் எழுந்தது.



    இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்தனர். இதனிடையே, தி.மு.க.வினரை போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கருப்பு கொடி ஏந்தி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர். அவர்கள் ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    அதில், ‘மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், பல்வேறு மாவட்டங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்கவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு. மாநில அரசியலைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஆளுநருக்கு உள்ளது. தமிழக அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை. 

    ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மக்களின் நலனுக்காக, வரும் மாதங்களிலும் மக்கள் நலதிட்டங்ளை ஆய்வு செய்யும் பணி தொடரும்’, என கூறப்பட்டுள்ளது.
    ×